NewPitch அறிமுக விழா

ஈழம் சினிமாவின் அடுத்த பரிணாமத்திற்கான தொடக்கம்.

NewPitch அறிமுக விழா: ஈழம் சினிமாவின் அடுத்த பரிணாமத்திற்கான தொடக்கம்.

Opening Dec 15, 2023

மிகப்பெரும் திருப்புமுனைகளுக்கான ஆரம்பம் மிக எளிமையாக - ஈழத் திரையுலகத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்காக நிறுவப்பட்டிருக்கும் NewPitch நிறுவனத் தொடக்க விழா. டிசம்பர் 15, 2023 அன்று, ஒன்ராறியோவின் மார்க்கமில் உள்ள கனடியத் தமிழர்களின் வர்த்தக சபையில் நடந்தேறியது.

img not found

கனடியத் தமிழர்களின் வர்த்தக சம்மேளனத்தின் மண்டபத்தில் NewPitch இன் தொடக்கத்திற்கான சரியான பின்னணியுடன் நிகழ்வு ஆரம்பமானது.

img not found

தொலைநோக்கு பார்வையாளர்கள்: எமது நிறுவகர்கள்

NewPitch என்பது ஒரு நாளில் தோன்றி நிறுவப்பட்ட ஒன்றல்ல; இது உலகெங்கிலும் உள்ள 19 நிறுவன உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தூரநோக்கு. பல மாதங்களாக துல்லியமான திட்டமிடலில் ஒரு சிறந்த மூலோபாய கட்டமைப்பு மற்றும் செயற்திட்டங்களை உருவாக்கிய பின்னரே, கடந்த மார்கழி 15 ஆம் திகதி, நமது கனடிய நிறுவகர்களின் கடின உழைப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட அறிமுக விழா ஊடாக எமது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

img not found

ஈழத் திரையுலகின் ஆணிவேர்களை போற்றும் வகையில் பாரம்பரிய முறைப்படி அக வணக்கத்துடன் விழா ஆரம்பமானது. "Rays of hope" ஆவணப்படத்தின் உருவாக்கக் குழு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர்.

“டிஜிட்டல் தடயகள்: இணையதளம் மற்றும் சமூக ஊடக அறிமுகம் ”

NewPitch, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் உலகில் அடியெடுத்து வைத்தது, நாம் உருவாக்க தயாராக இருக்கும் சினிமா உலகத்திற்கான மெய்நிகர் நுழைவாயிலாக பார்வையாளர்களை இணைக்கும் வகையில் சமூக ஊடகத் தளங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. சினிமா ஆர்வலர்கள், படைப்பாளிகள் மற்றும் சினிமா ரசிகர்கள் நம் செயற்பாடுகளுடன் தொடர்ந்து இணைந்து இருக்க முடியும்.

WEBSITE
FACEBOOK
INSTAGRAM
TWITTER


ஈழத்தின் கதைசொல்லிகளுக்கான அழைப்பு: திரைக்கதைகளுக்கான தேடல்

img not found

தொடர்ச்சியாக முழு நீளத்திரைப்படங்களை தயாரிக்கும் எமது திட்டத்தின் முதல் அறிவிப்பாக அமைந்தது இந்த திரைக்கதைகளுக்கான தேடல். அதன்படி இலங்கை ரூபா 6 கோடிக்குள் படமாக்கக்கூடிய முடிக்கப்பட்ட திரைக்கதைகள் ஈழத்து எழுத்தாளர்களிடம் இருந்து பெறப்பட்டு அதில் தெரிவு செய்யப்படும் திரைக்கதைகள் நம்மால் திரைப்படமாக தயாரிக்கப்பட இருக்கிறது. திரைக்கதைகளை நமது இணையத்தளத்தின் பின்வரும் பக்கத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

https://newpitch.net/script

இந்த சினிமா பயணத்தில் பங்களிக்க கதைசொல்லிகள், முதலீட்டாளர்கள், தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளிகளை NewPitch அழைக்கிறது. நாம் உருவாக்க இருப்பது திரைப்படங்கள் மட்டுமல்ல; நமக்கான ஒரு தொழில்துறையுடன் சேர்த்து எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய இருக்கும் எமது கதைகளை சொல்லும் ஓர் கட்டமைப்பை..

NewPitch தனது பயணத்தை இந்த அறிமுக விழா ஊடாக ஆரம்பித்திருக்கிறது. இந்த நீண்ட நெடிய பயணத்தில் உங்கள் அனைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு நிறுவனமாக மாபெரும் அமைப்பாக உருப்பெற வைக்க உலகம் பூராகவும் இருக்கும் எமது நிறுவப்கர்கள் அடுத்த செயற்திட்டங்களை நோக்கி உழைக்க ஆரம்பித்து விட்டனர்.

NEWPITCH - BE IN ACTION. HIT THE VISION

img not found