Be in Action, Hit the Vision

Amplifying Eelam Stories Through Captivating Cinema

Collaborate with us in this journey

Who We Are

NewPitch நிறுவனமானது ஈழத்தமிழர்களுக்கான திரைப்படத் துறைசார் அனைத்துவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் பொருட்டும் எமக்கான சினிமா முயற்சியில் அடுத்த கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தும் பொருட்டும் நிறுவப்பட்ட ஒரு வர்த்தக நிறுவனமாகும். பிரான்ஸ் நாட்டில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனமானது உலகெங்கும் வாழும் 19 ஈழத்து முதலீட்டாளர்கள் மற்றும் சினிமாச் செயற்பாட்டாளர்களினால் நிறுவப்பட்டது.

img not found

எமது தூரநோக்கு

எமது மக்களின் பெருமிதமாகவும் எமக்கான சர்வதேச அடையாளமாகவும் மிளிரும் வகையில் எமது திரைப்படத் துறையை கட்டியெழுப்புதல் கட்டமைத்தல்.

img not found

எமது செயலிலக்கு

உலகெங்கும் ஈழத் தமிழரிடையே பரவியிருக்கும் சினிமாத் துறைசார் திறமைசாலிகளையும் பிற வளங்களையும் ஒருங்கிணைத்தல் நெறிப்படுத்துதல் நிறுவனமயமாக்குவதன் மூலம் எமக்கான சினிமாவை வளப்படுத்துதலும் வெற்றி பெறச் செய்தலும்.

img not found
எமது பிரதான நோக்கங்கள்

  எமக்கான சினிமாவுக்கான பலமான நிதி மூலத்தை கட்டி எழுப்புதல்

  சமகால சினிமா தொழில்நுட்ப, கலை சார் முன்னேற்றத்திற்கு இணையாக போதிய தொழில்முறைசார் தகமையுடனும் நிதி வளத்துடனும் திரைப்படங்களை தயாரித்தல்

  தொடர்ச்சியான முழுநீள மற்றும் குறுந்திரைப்பட தயாரிப்புக்கான கதைத் திரட்டை உருவாக்கலும் தரமான திரைக்கதைகளை எழுதுவதற்கான நிதி மற்றும் அறிவுசார் ஆதரவை தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு ஏற்பாடு செய்தலும்

  தனிநபர்களாகவும் சிறு குழுக்களாகவும் உலகெங்கும் சிதறியிருக்கும் ஈழத்து சினிமா துறை சார் திறமையாளர்களை ஒருங்கிணைத்து ஒருமுகமாகச் செயற்பட வைத்தல்

  சினிமாசார் அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்கான செயற்பாடுகளிலும் பயிற்சிகளிலும் தகுதியானவர்களை ஈடுபடுத்தலும் வேண்டிய உதவிகளை வழங்குதலும்

  சர்வதேச, தமிழ்நாட்டு சினிமா படைப்பாளிகள் வளவாளர்கள் தயாரிப்பாளர்கள் விநியோகத்தர்களுடன் ஆரோக்கியமான கூட்டுகலை ஏற்படுத்துதலும் எமது படைப்புகள் மையநீரோட்ட சினிமாப் பார்வையாளர்களைச் சென்றடைவதற்கான சகலவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்தலும்

  எமக்கான சினிமா செயற்பாடுகளின் பங்காளிகளாக எமது மக்களை உள்வாங்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்

  சினிமாவை எமக்கான பொருண்மிய வளமாகவும் தொழிற்துறையாகவும் சர்வதேச தொடர்பாடல் ஊடகமாகவும் கட்டியெழுப்புதல்

Collaborate with us !

NewPitch இல் இணைந்து ஈழ சினிமாவின் வளர்ச்சியில் பங்காளர் ஆகுங்கள்!

ஈழத்தின் நம் வாழ்வியல், அடையாளம், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளைப் பிரதிபலிக்கும் கதைகளை பின்னுவோம். எமக்கான திரைப்பட தொழில்த்துறையை வடிவமைக்கும் பணியில் எங்களுடன் இணையுங்கள், அங்கு உங்களின் தனித்துவமான திறமையும் பார்வையும் எங்கள் சினிமா கனவுகளுக்கு உந்து சக்தியாக இருக்கும். ஈழத் தமிழ்ப் பண்பாட்டின் ஆன்மாவை உலகமெங்கும் ஒலிக்கச் செய்யும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்குவோம்.

Get In Touch

Phone

+1 (647) 248-8542