சிறந்த திரைக்கதைகளின் குறும்பட்டியல்

NewPitch இனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைக்கதைகளின் குறும்பட்டியலை அறிவிக்கிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி .

NewPitch இனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைக்கதைகளின் குறும்பட்டியலை அறிவிக்கிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி

NewPitch 23 Jan 2024

எமக்கான சினிமாவை மீள்கட்டமைப்பு செய்வதற்கான ஒரு முக்கியமான பாய்ச்சலாக, NewPitch அறிவித்து இருந்த திரைக்கதைத் தேடலில் கிடைக்கப் பெற்ற மிகச்சிறந்த திரைக்கதைகளின் குறும்பட்டியலை நாளை மாலை பி.ப 6.00 மணிக்கு மதிப்பிற்குரிய திரைப்பட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவிக்கிறார்.

img not found

திரைக்கதைத் தேடலுக்கான பயணம்: NewPitch ஆனது எமக்கான சினிமாவை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் வெற்றிபெறச் செய்யவும் எமக்கான அடையாளம் ஆக்கிக் கொள்ளவும் உறுதிபூண்டுள்ளது. அதன் பொருட்டு எமது படைப்பாளிகளின் சிறந்த திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் போதிய வளங்களுடனும் வசதிகளுடனும் படமாக்க்கும் பணியில் காலடி வைத்துள்ளது. அதன் முதல் கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் முழுநீளப்படங்களுக்கான சிறந்த திரைக்கதைகளுக்கான தேடலை ஆரம்பித்திருந்தது. அதற்கமைய எமக்கு சமர்ப்பிக்கப்பட்ட 24 திரைக்கதைகளில் இருந்து,. நுணுக்கமான மதிப்பீட்டிற்குப் பிறகு, எங்கள் நிபுணர் குழு ஏழு திரைக்கதைகளை குறும்பட்டியலிட்டுள்ளது.

அவ்வாறு குறும்பட்டியல் செய்யப்பட்ட திரைக்கதைகளின் படைப்பாளிகளின் பெயர்களை நாளை (24.01.24) தமிழ்த்தேசிய உணர்வாளரும், திரைப்படத் தயாரிப்பளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி அவர்கள் காணொளி வாயிலாக அறிவிக்க இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி அவர்கள் தமிழ் திரையுலகில் தனித்துவம் மிக்கவர். அவரது தீவிரமான சினிமாப் பங்களிப்புகளுக்காகவும், அற்புதமான கதைகளில் ஆர்வமுள்ளவராகவும் புகழ்பெற்றவர். அறிவிப்பின் போது ஈழம் சினிமா சார்ந்து தனது ஆழ்ந்த புரிதலையும் நுண்ணறிவையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். அவரது ஈடுபாடும் ஆதரவும் எமக்கான சினிமாவை வலுப்படுத்தும் பயணத்துக்கும் கூடுதல் முக்கியத்துவத்தையும் பலத்தையும் சேர்க்கிறது.